Friday, August 20, 2021

நாட்டை முழுமையாக முடக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம்!



மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டை ஒருவாரத்திற்கு முழுமையாக முடக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் மகாநாயகர்களுக்கு தெளிவுபடுத்தியதன் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை இன்று இரவு 10 மணி முதல் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முடக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

எனினும் அத்தியாவசிய சேவைகள் யாவும் இயங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!