Monday, July 19, 2021

இதுவே எனது முதற் கட்ட செயற்பாடு: நிதி அமைச்சர் பசில் வெளியிட்ட செய்தி!

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைப்பது எமது முதற்கட்ட செயற்பாடாக அமையும் என தெரிவித்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்று வேளையும் உணவு பெற்றுக்கொள்ள வசதி இல்லாத மக்கள் வாழ்கிறார்கள்.இவர்கள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.பல்வேறு எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்கள் ஆட்சி அதிகாரத்தை அளித்துள்ளனர்.

ஆகவே அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சருக்கும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!