Monday, July 26, 2021

ரிஷாட் வீட்டிற்குள் மறைந்திருக்கும் மர்மங்கள்- மேலும் இரு பெண்களின் மரணத்தால் சர்ச்சை!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றும் போது இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுக்கள் இரண்டு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு இளம்பெண் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் மற்ற பெண் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் அண்மையில் ரிஷாட் வீட்டில் பணியாற்றிய சிறுமி உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவருக்கு தீ வைக்கப்பட்டதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!