Monday, July 26, 2021

நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் புதிய எச்சரிக்கை!



திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் பிற நிகழ்வுகள் பொது சுகாதார ஆய்வாளர்களால் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறினால் அதற்காக நிகழ்வு அமைப்பாளர்கள் மற்றும் நிகழ்வு மண்டப உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 2000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சங்கம் எச்சரிக்கின்றது.

மண்டபத்தில் 25 சதவீதத்துக்கும் அதிகமாக கூட்டம் இருக்கக் கூடாது என்ற விதிமுறைக்கிணங்கவே திருமணங்களையும் பிற செயற்பாடுகளையும் நடத்த தாங்கள் அனுமதித்ததாகவும் இருப்பினும் சுகாதார ஆலோசனையை மீறி பல திருமணங்கள் நடத்தப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்களுடன் அறிக்கைகள் உளளதாகவும் அத்தகைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பொது சுகாதார ஆய்வாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!