சிறுவர் துஷ்பிரயோகங்களில் சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம்- ஐக்கிய மக்கள் சக்தி

சிறுவர் கடத்தல்,சிறுவர் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிகளுடன் தமது கட்சியால் இணைந்து பணியாற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சிறுவர்கள் மீதான அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் தமது கட்சி கண்டிக்கும் என்றும் அதுவே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கூறினார்.

கூட்டணியில் கட்சிகளுக்கு சொந்த கொள்கைகள் இருந்தாலும் கட்சியின் கொள்கையை யாராவது மீறுவார்களாயின் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் பதியுதீனின் வீட்டில் இடம்பெற்ற சிறுமியின் மரணம் குறித்து நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.