தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் குறையலாம்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கும், தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவதற்கும் இன்னும் இரு வாரங்கள் அல்லது மூன்று வாரங்கள் செல்லும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிர் இழப்போர் எண்ணிக்கை குறைந்து வருவது தெளிவாகத் தெரிவதோடு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய ஒருவர் பத்து நாளுக்குள் உயிரிழக்கும் நிலைமை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்