Tuesday, June 1, 2021

ஜூன்-ஜூலை மாதங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம்!

 



பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமாவதையிட்டு ஜூன், ஜூலை மாதங்களில் டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இவ்வாண்டில் இதுவரை குறைந்த எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் தற்சமயம் நிலவும் நெருக்கடியினால் இம்முறை சுகாதார அதிகாரிகளால் நேரடியாக உரிய இடங்களுக்குச் சென்று கண்காணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால் இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமான முறையில் முன்னெடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். வீடுகளையும் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!