Tuesday, June 1, 2021

எதிர்வரும் 7ஆம் திகதி பயண கட்டுப்பாடுகளை தளர்த்தும் சாத்தியம்!

 



எதிர்வரும் 7ஆம் திகதி பயண கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்று காலை சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்த சில நாட்களில் மக்கள் செயற்படும் விதம், பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு முக்கிய காரணமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!