Friday, May 7, 2021

6 லட்சம் தடுப்பூசி கிடைக்கும்; ஜனாதிபதி நம்பிக்கை

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெட்ரோஸ் கெப்ரியேசஸ் இலங்கைக்கு தேவைப்படும் 6 லட்சம் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பார் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் பதிவு ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

WHO தலைவருடன் ZOOM தொழில்நுட்பம் மூலம் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் போது, சீனாவின் Sinopharm தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய தற்போது கையிருப்பில் உள்ள ஆறு லட்சம் Sinopharm தடுப்பூசிகளை கொண்டு இலங்கை மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த முடியும் என ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!