Saturday, May 29, 2021

மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்க தீர்மானம்!

ஜூன் மாதம் 2 ஆம் திகதியிலிருந்து ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவை மீண்டும் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்த சமூர்த்தி, வீட்டுப் பொருளாதாரம், நுண்நிதி, சுயவேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ, முதலாவதாக மூர்த்தி பயனாளிகளுக்கு அத்தொகையை வழங்கவும் விரைவாக சகலருக்கும் வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளார்.

தற்போதைய கொரோனா தொற்றையும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாட்டையும் கவனத்தில் கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் கலந்தாலோசித்து இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர் என கூறியுள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கத்தால் ஏற்கனவே வழங்கப்படும் கொடுப்பனவுகளில் ரூபா 5000ஐ விட குறைந்த தொகையை பெறும் நபர்களுக்கும் 5000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கும் இத்தொகை கிடைக்கும் என தெரிவித்த அவர் 60-65 லட்சம் குடும்ப தொகுதிக்கு வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!