Monday, May 10, 2021

விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லை - சுற்றுலாத்துறை அமைச்சு

விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் கொவிட் குழுவின் முடிவுக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொவிட் பரவி இருந்தாலும் சுகாதாரத் தறையின் அறிவுறுத்தலின்படி இலங்கைத் தொழிலாளர்களை திருப்பி அனுப்புவது தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் அரசாங்க தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை போலவே தொடரும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விமான நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் ரணதுங்க கூறினார்.

இலங்கை தொழிலாளர்களிடையே நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் அவர்களிடமிருந்து இதுவரை எந்த கொத்தணிகளும் உருவாகவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!