Monday, May 10, 2021

எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடு!

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!