Saturday, May 29, 2021

சீன தொழிற்துறைகளில் இணைவதாயின் சீன மொழி அத்தியாவசியமாகும்!

சீனாவிலோ அல்லது சீனா சார்ந்த தொழில் துறைகளில் இணைவதாயின் சீன மொழி அவசியமாகும் என நீர்வளத் துறை அமைச்சரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் சீனா, சீனமொழி மற்றும் சீனாவின் கலாச்சாரங்கள் குறித்து கேலிச்சத்திரங்கள்,தகவல்கள் பரிமாறப்படுவது குறித்து அவர் நேற்று முன்தினம்(27) கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது சாதாரண விடயமாகும்.சீன நாட்டில் அல்லது சீனா சார்ந்த இடங்களில் தொழில் புரிவதாக இருந்தாலும் சீனமொழி திறமை இருந்தால் அது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என தெரிவித்த அவர் தொழில் வாய்ப்புகளை பெறுவதற்கு இது ஒரு மேலதிக தகைமையாகவும் நன்மையாகவும் அமையும் என்றார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!