Saturday, May 29, 2021

வாகனங்கள் மற்றும் தனி நபர்களை பரிசோதிக்கும்போது பொலிஸார் தனிமனித சுயமரியாதைக்கு மதிப்பளிக்க வேண்டும்!


வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை செயற்படும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றுநிறுபம் ஒன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சில பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அசௌகரியம் ஏற்படும் விதத்தில் நடந்து கொள்வதை ஊடக காணொளிகள் மூலம் காணக்கூடியதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக குறித்த நபர்களின் சுயமரியாதை மற்றும் சமூக அந்தஸ்து பாதிக்கப்படுவதாக பொலிஸ் மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் வாகனங்கள் மற்றும் நபர்களை சோதனைக்கு உட்படுத்தும் போது இவ்வாறான செயல்களை தவிர்க்குமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன குறித்த சுற்றுநிறுபம் ஊடாக அறிவுறுத்தியுள்ளார்.

எனினும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் பதிவானால் குறித்து அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!