Tuesday, May 25, 2021

கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்,அந்த வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

அம்பாறையைச் சேர்ந்த நபரே இவ்வாறு நேற்று மாலை தப்பியோடியுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான மொஹமட் ரிகாஷ் என்பவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். அவர் தொடர்பிலான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!