Wednesday, May 26, 2021

எதிர்வரும் 31 மற்றும் 4ஆம் திகதிகளில் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்யலாம் - வாகனங்களில் செல்ல தடை!

நடமாட்ட கட்டுப்பாடு தற்காலிகமாக எதிர்வரும் 31 மற்றும் ஜூன் 4 ஆம் திகதிகளில் தளர்த்தப்படும் போது, வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக வெளியே செல்ல முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளியே செல்லும் எந்த ஒரு நபருக்கும் வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும், வீட்டுக்கு அருகிலுள்ள (நடந்து செல்லும் தூரத்தில் உள்ள) வர்த்தக நிலையங்களில் மாத்திரமே அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!