Friday, May 7, 2021

சிறுவர்களை தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது ஆபத்தானது!

சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியின் காட்சி திரையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் கண் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மனநல விசேட வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இடைவெளிவிட்டு இதனை பயன்படுத்துவதனால், இதனால் ஏற்படுகின்ற பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கையடக்கத்தொலைபேசி மற்றும் கணினியை தொடர்ச்சியாக பயன்படுத்துவதனால் நீண்டகால தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நாட்களில் குழந்தைகள் வீட்டினுள்ளே சிக்கி இருப்பதனால் அவர்கள் கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.எனவே இது தொடர்பாக பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!