Sunday, May 9, 2021

கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்டின் சில பாகங்கள் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது!

கடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கெட்டின் சில பாகங்கள் இன்று காலை 8.50 மணியளவில் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதென சீன ஊடகங்களை மேட்கோள்காட்டி, ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலின் மாலைதீவுக்கு வடக்கில் இது விழுந்துள்ளதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் குறித்த கடல் பரப்பில் இதுவரை சுனாமி எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 தொன் நிறையுள்ள குறித்த ரொக்கெட்டானது 30 வருடங்களுக்கு பிறகு விண்வெளியிலிருந்து பூமியில் விழுந்த மிகப்பெரிய கழிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!