Wednesday, May 5, 2021

தனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம்!

கொவிட் எச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்படும் தனியார் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டும் என தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

கொவிட் வைரஸ் பரவல் காரணமாக ஊழியர்களை பாதுகாப்பதற்கு தனியார் நிறுவனங்களில் சுகாதார குழுக்களை அமைக்குமாறு தொழில் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!