வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன - இலங்கை மருத்துவ சங்கம்!

வைத்தியசாலைகள் நோயாளர்களினால் நிரப்புவதால் அத்தியாவசிய பயணங்களை மாத்திரம் முன்னெடுத்து பயணக் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்ட விடயங்கள் வருமாறு,

நோயாளர்களுக்கான கட்டில்கள், இட வசதி ஆகியன பாரியளவில் குறைந்து செல்கின்றன.அவசர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பியுள்ளன.வைரஸின் புதிய திரிபில் பரவும் வேகம் அதிகமாக உள்ளது, தற்போது குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டவுடன் பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.