Sunday, May 9, 2021

எது நடந்தாலும் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படவேண்டும்!

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலோ கட்டாயம் அவர்களுக்கு சம்பளத்தை உரிய நிறுவனங்கள் வழங்க வேண்டுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்று காரணமாக பணிக்கு வருகை தர முடியாது போனவர்களுக்கு அரைவாசி சம்பளத்தை வழங்குவது தொடர்பில் முதலாளிமார் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று காரணமாக தனியார் நிறுவனங்கள் பலவாரங்கள் மூடப்பட்டாலும் ஊழியர்களுக்கு கட்டாயம் சம்பளத்தை வழங்க வேண்டும்.

நட்டமீட்டும் நிறுவனங்களாக தரவுகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் மாத்திரம் குறைந்தபட்ச தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 14,500 ரூபாவை வழங்க வேண்டும். சம்பளத்தை செலுத்தாமல் உள்ள நிறுவனங்கள் தொழில் தொடர்பில் தொழில் அமைச்சுக்கு தெரியப்படுத்துமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!