Friday, May 7, 2021

மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படுகிறது!

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலைகள்,முன்பள்ளிகள் தனியார் கல்வி வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகளை மீண்டும் தொடங்குவது குறித்து மூன்று நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் covid-19 நோய்த்தொற்று பரவல் காரணமாக பாடசாலைகளுக்கு இன்று வரை சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.எனினும் தற்போது மறு அறிவித்தல் வரை பாடசாலைகள்,முன்பள்ளிகள் தனியார் வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!