Monday, May 10, 2021

தடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடமும் நிதி இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது!

கொவிட் தடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் ஒழிப்பு வேலைத் திட்டத்திற்கு தேவையான நிதி அரசாங்கத்திடம் உள்ளது. நாடுபூராகவும் உள்ள ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் தடுப்பூசி வழங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!