Monday, May 24, 2021

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது!

2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை மற்றும் பிரத்தியேக பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பங்களை இந்த மாதம் 21ஆம் திகதியில் இருந்து அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பலாம் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

எனவே பரீட்சார்த்திகள் இணையவழி ஊடாக கேட்கப்பட்டுள்ள விபரங்களை சரியாக பூர்த்தி செய்து அனுப்ப முடியும் என தெரிவித்த அவர், எனினும் நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பி, பாடசாலைகள் திறக்கப்பட்டதும் பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் கையளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!