Tuesday, May 4, 2021

2021 ஐ.பி.எல் போட்டிகள் இடை நிறுத்தப்பட்டதாக பி.பி.சி.ஐ அறிவித்துள்ளது!

கடந்த 48 மணிநேரத்தில் வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களிடையே அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக 2021 ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரை இடைநிறுத்தம் செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

நடப்பு தொடரில் மொத்தம் 29 லீக் ஆட்டங்கள் நடத்தப்பட்டன.

14வது ஐ.பி.எல் தொடரில் விளையாடும் 4 வீரர்களும், அணியின் பல உறுப்பினர்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!