Tuesday, May 11, 2021

மாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள்...


 

மாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். சோதனைகள், கண்காணிப்புகள் இடம்பெறும்.


 
01.முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.

02.அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை மாகாணங்களுக்கு இடையில் செல்ல அனுமதி அட்டையாக பயன்படுத்தலாம்.

03. சுற்றுலா, உறவினர்களை சந்தித்தல், ஹோட்டல்களில் தங்குதல் உட்பட தனிப்பட்ட விடயங்களுக்காக மாகாணங்களில் இருந்து வெளியேறுவதற்கும், உள்நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

04. மாகாண எல்லையை கடப்பதற்கு குறுக்கு வழிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவியல் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகிய சட்டங்களின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

 05. மாகாண எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குங்கள். நீங்கள் வழங்கும் தகவல்கள் திருப்தியில்லையெனில் அவர்களால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவும்.

 06.அத்தியாவசிய சேவையை முன்னெடுப்பவர்களுக்கு வெளி மாகாணங்களில் தங்கவேண்டிய தேவையேற்படின் அது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸாருக்கு அறிவித்து அனுமதி பெறவேண்டும். 

07. கூட்டம், கருத்தரங்கு, கண்காட்சி, சமய நிகழ்வுகள், விருந்துபச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும், அனுமதி வழங்கியவர்களும் கைது செய்யப்படுவார்கள்.

08. மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு அனுமதி பத்திரம் எதுவும் வழங்கப்படாது.

09.மாகாண எல்லை தாண்டி வருபவர்களுக்கு ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படக்கூடாது. அவ்வாறு வழங்கினால் உரிமையாளர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

10. மாகாணங்களுக்கிடையிலான கட்டுப்பாடு மே 30 ஆம் திகதி முதல் நடைமுறையில் இருக்கும்.

11. நாட்டிலுள்ள அனைவரும் தனிமைப்படுத்தல் சட்டத்தை முழுமையாக பின்பற்ற வேண்டும். தொழில் நிலையங்களில் சுகாதார வழிகாட்டல்கள் உரிய வகையில் பின்பற்றப்படவேண்டும்.

12. நாளை முதல் வாகனங்கள் தீவிரமாக சோதிக்கப்படும். ஆட்டோக்களில் இருவர் மட்டுமே பயணிக்கலாம். முகக்கவசம் அணிவது கட்டாயம்.

13. பொலிஸ் அதிகாரிகள் அனைவரினதும் விடுமுறை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை இரத்து. தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ளவர்கள், தனிமைப்படுத்தல் காலம் முடியும்வரை தொழிலுக்கு வரவேண்டியதில்லை.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!