நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,879ஐக் கடந்துள்ளது!

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 1879 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவருடைய மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம்(01)  நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டனை அண்மித்த பகுதிகளில் 15 பேரும் ஹங்குராங்கத்தையில் 18 பேரும் இராகலையில் 9 பேரும் மதுரட்டயில் இருவரும் வலப்பனையில் 17 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.