Thursday, May 6, 2021

பஸ் நிலையங்களில் சுகாதார பரிந்துரைகளை மீறுகின்ற பஸ்களை கண்டறிய அதிகாரிகள்!

கொழும்பு பெஸ்டியன் மாவத்தை, மாகும்புற, வவுனியா மற்றும் கடுவெல ஆகிய பிரதான பஸ் நிலையங்களில் சுகாதார பரிந்துரைகளை மீறுகின்ற பஸ்களை கண்டறிய அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெனரல் கொமாண்டர் திவான் மிரண்டா தெரிவித்துள்ளார்.

சுகாதார பரிந்துரைகளை மீறி பயணிக்கின்ற பயணிகள் போக்குவரத்து பஸ்களின் அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு தினமும் பல பிரதேசங்களை உட்படுத்தி நடமாடும் பரிசோதகர்களை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சட்ட விதிமுறைகளை மீறுகின்ற பஸ் சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பல இந்த குற்றங்களை தொடர்ச்சியாக செய்தால் பஸ் அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!