Thursday, May 20, 2021

மட்டக்களப்பு சிறையில் 44 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு சிறையில் எழுமாற்றாக 62 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளானவர்களை கொழும்பில் உள்ள சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறையில் இருவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை களிலேயே இவ்வாறு 44 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேசத்தில் மாத்திரம் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!