Thursday, May 20, 2021

யுனிசெப் நிறுவனம் ஒட்சிசன் சிலிண்டர்கள் உட்பட முக்கிய உபகரணங்களை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது!

அவசரமாகத் தேவைப்படும் ஒக்சிசன் சிலிண்டர்கள் உட்பட முக்கியமான உபகரணங்களை யுனிசெப் நிறுவனம் அவுஸ்திரேலியாவின் உதவியுடன் சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்ட இந்த பொருட்களை இலங்கைக்கான அவுஸ்திரேலிய பணி குழுவின் தலைமை அதிகாரி டேவிட் ஹோலியும் ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் எம்மா பிரிகாமும், யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டியும் நேற்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் வழங்கி வைத்தனர்.

291 ஒக்சிசன் சிலிண்டர்கள், 342 ஒட்சிசன் ரெகுலேட்டர்களும், 2490 முகக்கவசங்களும்,20 தீயணைப்பு கருவிகளும் இதில் உள்ளடங்கியுள்ளன.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!