இலங்கையின் புதிய நட்சத்திரம் பிரவீன் ஜயவிக்கிரம.

22 வயது நிரம்பிய சுழற்பந்துவீச்சாளர் பிரவீன் ஜயவிக்கிரம பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் பெற்றுக்கொண்ட 5 விக்கெட்டுகள் மூலமாக அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது பந்துவீச்சாளர் என்கிற பெருமையை பெற்றுக் கொள்கிறார்.


கோசல குருப்பராய்ச்சி,உபுல் சந்தன,அகில தனஞ்சய மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் இதற்கு முன்பு இந்த சாதனைக்கு சொந்தமான இலங்கை வீரர்கள் ஆவர்.