பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு!

கொவிட் பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒரு வார காலம் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் சுகாதார நிலைமைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அடுத்த வாரம் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பாடசாலைகளை நடத்துவது உசிதமில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக எதிர்வரும் 7ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்