Friday, May 7, 2021

யாழ்.மாநகர காவல் படை சீருடை விவகாரம் தொடர்பில் ஐந்து உத்தியோகத்தர்களுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு!

யாழ்ப்பாணம் மாநகரில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேரும் வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நாலாம் மாடியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அலுவலகத்துக்கு வருகின்ற 11ம் திகதி காலை 9 மணிக்கு சமுகமளிக்குமாறு ஐந்து பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரத்தினை தூய்மையான நகரமாக பேணுவதற்காக மாநகரசபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து கடந்தமாதம் கடமைக்கு அமர்த்தப்பட்டனர்.

எனினும் உத்தியோகத்தர்கள் அணிந்திருந்த சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடைக்கு ஒத்தது என சர்ச்சை எழுந்தது.இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!