Monday, May 10, 2021

பிசிஆர் அறிக்கை தாமதத்தாலேயே நேற்றைய தினம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!


கடந்த சில நாட்களாக தேங்கியிருந்த பிசிஆர் அறிக்கைகள் நேற்று ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டதனாலேயே நேற்றைய தினம் 2600க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகி இருந்ததாக சுகாதார அமைச்சு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


தினசரி 1500 பிசிஆர் பரிசோதனைகளே நடத்தப்பட்டு வந்த நிலையில்,தற்போது அது 20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இதன் முதல் கட்டத்தில் ஏற்பட்ட தாமதமே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தற்சமயம் 20,642 பேர் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!