சுவாசிப்பதற்கு சிரமமான நிலையில் திடீரென உயிரிழந்த நபர்- பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி!

சுவாசிப்பதற்கு சிரமமான நிலையில் திடீரென வீட்டிலேயே உயிரிழந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யக்கலமுல்ல பொல்பாகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த தொற்றாளருக்கு நெஞ்சு வலியுடன் வாந்தி ஏற்பட்ட நிலையில் மயக்கமடைந்து கீழே விழுந்து இறந்துள்ளார்.உயிரிழந்த பின்னர் கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் சென்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனது மனைவி பிள்ளைகளுடன் கடந்த மாதம் 26ம் திகதி பதுளைக்குச் சென்று இவர் வீடு திரும்பியுள்ளார்.இதேவேளை கடந்த மாதம் 30ஆம் திகதி தனது மனைவியின் சகோதரனின் வீட்டுக்குச் சென்று தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் நேற்று(01) அதிகாலை 3.30 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.இதன் பின்னர் அவருக்கு குடிக்க தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.


கொரோனாவால் ஏற்பட்ட நிமோனியா நிலைமையால் இவர் உயிரிழந்துள்ளதாக அவரது மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.