Sunday, May 2, 2021

காலி-கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!


காலி-கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான 36ம் விளக்க வாட் நேற்றிரவு(01) முதல் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளது.


இதனால் அந்த வைத்தியசாலையில் மேலும் இரு வாட்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் கே.எச்.ஜி.ஜிவரதன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 36ம் இலக்க வாட்டில் 55 தொற்றாளர்கள் காணப்பட்ட நிலையில் இதனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக 46,25ஆம் இலக்க வாட்கள் கொரோனா தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு மேலதிகமாக அக்மிமன மெலிபன் வைத்தியசாலையும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!