Friday, May 21, 2021

நடமாட்டக் கட்டுப்பாட்டு காலப் பகுதியில் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்துறைகள்!

நாடு முழுவதும் நேற்று(21) இரவு ஒரு மணி முதல் நடமாட்ட கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளதுடன், எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடரும்.

எனினும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையில் நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டு அன்றிரவு 11மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையிலும் மீண்டும் நடைமுறைக்கு வரும்.

குறித்த காலப்பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கடற்றொழில் துறை இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் மீன் மொத்த விற்பனை நிலையங்களை திறப்பதற்கு வர்த்தகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் சகல பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!