Monday, May 17, 2021

பொருட்களின் விலையை அதிகரிக்க இடமளிக்கப்படமாட்டாது! - அமைச்சர் பந்துல குணவர்தன.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எவ்விதமான தட்டுப்பாடுமின்றி விநியோகிக்கும் பொறிமுறைக்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு கிடைப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள மொத்த விற்பனை வர்த்தகர்களுக்கு புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தைக்கு வருவதற்கும்,பொது மக்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் தேவையான அனுமதிப்பத்திரத்தை வழங்கி பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறையை தடையின்றிச் ஏற்படுத்துவதற்கும் புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை மற்றும் மாவட்ட செயலகங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இதற்கமைவாக நேற்று மொத்த விற்பனை நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்திருந்ததாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

மொத்த விற்பனைக்காக புறக்கோட்டையில் நான்காம், ஐந்தாம் தெருக்கள் இன்று திறக்கப்பட்ட நிலையில்,அதனை கண்காணிக்க சென்ற வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான இக்கட்டான நிலையில் பொருட்களின் விலையை அதிகரிக்க இடமளிக்கப்படமட்டாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக சங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைய தற்போதைய பொருட்களின் விலையே அமுலில் இருக்கும் எனவும் வர்த்தகத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!