Thursday, May 20, 2021

பிசிஆர் பரிசோதனைகளின் தரம் மற்றும் கட்டணத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!

தனியார் பிரிவினூடாக முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் தரம் மற்றும் கட்டணங்களை ஒழுங்குபடுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிசிஆர் இயந்திரம் ஒன்றின் ஒரு நாளைக்கு 1500 பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமென்றால், சில நிறுவனங்கள் 5000 முதல் 7000 வரை பரிசோதனைகளை முன்னெடுக்க முனைவதாக அமைச்சின் வைத்திய பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஜி.விஜேசூரிய கூறியுள்ளார்.

இந்த பரிசோதனைகளின் தரம் குறித்து சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய இவ் வாரத்திற்குள் உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இவ்விடயம் குறித்து சுற்றுநிறுபம் ஒன்றை வெளியிட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!