Sunday, May 16, 2021

கொரோனா தொற்று அதிகரிப்பால் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொகவந்தலாவையில் சில பகுதிகள் முடக்கம்!



பொகவந்தலாவை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால் உடன் அமுலுக்கு வரும் வகையில் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது.
 
பொகவந்தலாவை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் மாத்திரம் 43 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு பொகவந்தலாவை ஆரியபுர பகுதியில் ஒரே குடும்பத்தில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது.
 
குறித்த பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கெர்கஸ்வோட் 319G,இன்ஜஸ்ரீ  319L,ஆரியபுர ஸ்ரீபுர 319F,கொட்டியாகலை 319P,எனபீல்ட்  319J,டில்லரி 319M,கெம்பியன் 319 O,
வெஞ்சர் 320 L, டிக்கோயா தெற்கு,பொகவானை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்ட பிரதேசமாக முடக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
 
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் போக்குவரத்து மற்றும் வர்த்தக நிலையங்கள் மதுபான சாலைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்திற்கு வெளி பிரதேசத்திலிருந்து உள் வருவதற்கு,வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
பொகவந்தலாவை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 332 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
நாடளாவிய ரீதியில் 70 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!