Wednesday, May 12, 2021

வெளி மாகாண நபர்களுக்கு தங்குமிடம் வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

 

வெளி மாகாணங்களில் இருந்து வரும் நபர்களுக்கு தங்குமிடம் வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 
பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 
மேலும் வெளி மாகாணங்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கியிருப்பதை முற்றாக தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!