பொது சுகாதார பரிசோதகர் சங்கம் விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் நாடு உடனடியாக முடக்கப்பட வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ் வைரஸ் ஆனது பிரிட்டன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வுக் கூடத்தில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் நாட்டில் கொரோனா பரவல் விரைவாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டை முடக்குவதைத்  தவிர வேறு வழியில்லை என்றும் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இல்லையெனில் எதிர்காலத்தில் நாடு பெரும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரொனா தொற்றாளர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பிசிர் பரிசோதனைகளின் மூலம் சுமார் 30 %  தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

துணை கொத்தணி களை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உடனடியாக நாட்டை முடக்க வேண்டும் என்றும் பொது பரிசோதகர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.