பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஞாயிறன்று கலந்துரையாடல்.

எதிர்வரும் வாரத்தில் பாடசாலை ஆரம்பிக்கும் முறைமை குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று (28) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். அதேநேரம் மே 10ஆம் திகதி முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.