தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினால் 10,000 ரூபா தண்டப்பணமும் ஆறு மாதம் சிறை தண்டனையும்.

சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ள போதிலும் நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகமானோர் திருகோணமலை, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 3,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர், மேலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் 10,000 ரூபா தண்டப்பணம் மற்றும் 6 மாத சிறை தண்டனையும் வழங்கப்படும் என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.