இலங்கை வங்கியின் 23 கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாட்டில் தற்போதைய நிலையில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக இலங்கை வங்கியின் 23 கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தமது பேஸ்புக் வலைத்தளத்தில் விசேட அறிவிப்பை இலங்கை வங்கி வெளியிட்டுள்ளது.

அதற்கமைய மேல் மாகாணத்தில் இரத்மலான, குருகோட, இங்கிரிய, கொத்தட்டுவ மற்றும் வெலிவேரிய ஆகிய கிளைகளும் மத்திய மாகாணத்தில் கண்டி பொது வைத்தியசாலை கிளை மற்றும் வடமத்திய மாகாணத்தில் ரம்பேவ  சப்ரகமுவையில் கித்துல்கல ஆகிய கிளைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடமேல் மாகாணத்தில் வாரியபொல மற்றும் நிக்கவரெட்டிய, தெற்கில் காலி,இமதுவ, யக்கலமுல்ல, பெலியத்த,ஹம்பாந்தோட்ட, மித்தெனிய ஆகிய கிளைகளும் ஊவாவில் புத்தல, எத்தலிவெவ, ஹப்புதளை,மொனராகல மற்றும்பதுளை பிரதேச கடன் மத்திய நிலையமும் இன்று(28) மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கொரோனா ​தொற்றால் எதிர்வரும் நாள்களில் தமது வங்கி கிளைகளைத் திறக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் இலங்கை வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது