மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போதைப்பொருள் உபசாரம் செய்த ஆசிரியை கைது!

தன்னுடைய மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் போதைப்பொருட்களை உபசாரம் செய்த சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியை உள்ளிட்ட இளைஞர்,யுவதிகள் 15 பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருலப்பனையில் உள்ள அதி சொகுசு வீட்டின் இரண்டாவது மாடியில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டிருந்தபோதே இவர்களை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபரான ஆசிரியையின் இரண்டு மகன்மார்களும் அடங்குகின்றனர்.

இளைஞர் யுவதிகளுடன் ஐஸ் போதைப்பொருள் 15 கிராம், 2450 மில்லி கிராம் கஞ்சா,ஐஸ் போதை பொருளை பயன்படுத்துவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பெரும் எண்ணிக்கையான இளைஞர் யுவதிகள் அந்த வீட்டுக்கு வந்து போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர்.