அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற 150 பஸ்களின் அனுமதிப் பத்திரம் இரத்து!

இருக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக 150 பஸ்களின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

புது வருடத்திற்காக தமது சொந்த ஊர் சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக விசேட போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சபையின் 1992 பஸ்களும் 21 ரயில்களும் மற்றும் 1800 தனியார் பஸ்களும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

எதிர்வரும் 9 ஆம் திகதியிலிருந்து 16 ஆம் திகதி வரை இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.