Thursday, April 8, 2021

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா!

 

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனை அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 88 பேர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பாற்பண்ணை - பாரதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர ஆய்வுக்கூடத்திற்கு 1003 மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.அவர்களில் 129 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த தொற்றாளர்களில் 20 பேர் யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் கடைத் தொகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இதன்மூலம் கடந்த 14 நாட்களில் யாழ்ப்பாணம் மாநகர பகுதிகளைச் சேர்ந்த 87 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!