வீட்டிலிருந்து சைக்கிளில் பயணித்து ஓட்டுப்போட வந்த தளபதி விஜய்!

ஓட்டு போடுவது எவ்வளவு முக்கியம் என தற்போது எல்லா இளைஞர்களும் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள்.கடந்த சில நாட்களாகவே மக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

அந்த தகவல்களை நாம் அறிந்திருப்போம்.பிரபலங்களும் ஓட்டு போடுவதற்காக படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருந்தாலும் தற்போது அவரவர் இடங்களுக்குச் சென்று வாக்களித்துள்ளதை அறியமுடிகின்றது.

நடிகர் அஜித் இன்று காலை வாக்குச்சாவடி திறக்கும் முன்பே ஓட்டுப்போட முதல் ஆளாக தனது மனைவியுடன் நின்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யும் தனது வீட்டிலிருந்து ஓட்டு போடும் இடத்திற்கு சைக்கிளில் வந்துள்ளார்.