Wednesday, April 7, 2021

யாழில் 14 வயது மாணவனின் விபரீத முடிவு! பெற்றோர்களே அவதானம்.

கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக இணையதள விளையாட்டுக்களை விளையாடிய பாடசாலை மாணவன் ஒருவன் தாயார் கைத்தொலைபேசியை பறித்தமையால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், சுழிபுரம் - பிளவத்தை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் சிவனேஸ்வரன் நேருஜன், 14 வயது மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக கைத்தொலைபேசியில் விளையாட்டில் ஈடுபட்டு வந்தமையால் மாணவனின் தாயார் கைத்தொலைபேசியை பறித்து வைத்துள்ளார்.அதனை பொறுக்க முடியாத மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் விடயத்தில் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!